/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டி 3 மாதத்திற்குள் பாலம் சேதம்
/
கட்டி 3 மாதத்திற்குள் பாலம் சேதம்
ADDED : ஆக 26, 2025 03:11 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் ரோடு பகுதியில் நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட பாலம் கட்டிய 3 மாதத்திற்குள் சேதமடைந்து பெயர்ந்து வருகிறது.
அருப்புக்கோட்டை நகராட்சி 17வது வார்டு மலையரசன் கோயில் பகுதி கீழ மேல் தெரு மெயின் ரோட்டில் இருந்த பாலம் சேதமடைந்து போக்குவரத்திற்கும் மக்களுக்கும் சிரமமாக இருந்தது. இதையடுத்து பாலத்தை இடித்து புதியதாக கட்ட நகராட்சி மூலம் 18 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் நடந்தது.
பணிகள் முடிந்து பாலம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், கட்டிய 3 மாதத்திற்குள் பாலத்தின் இருபுறமும் பெயர்ந்து பள்ளம் ஆகி வருகிறது.
இந்தப் பாலத்தை பயன்படுத்தி தான் கனரக வாகனங்கள், பள்ளி கல்லுாரி வாகனங்கள், டூவீலர்கள் வந்து செல்கின்றன. பாலத்தின் இருபுறமும் ஓரங்களில் விரிசல் கண்டுள்ளது. இன்னும் சில நாளில் மாதங்களில் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
நகராட்சி அதிகாரிகள் பணிகளின் போது முறையாக ஆய்வு செய்வதுமில்லை. பாலத்திற்காக செலவிடப்பட்ட ரூ.18 லட்சம் நிதியும் வீணான நிலையில் உள்ளது.