/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகளை விரைந்து செய்ய தரமான மடிக்கணினி பிரின்டர்கள் வழங்க வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
/
பணிகளை விரைந்து செய்ய தரமான மடிக்கணினி பிரின்டர்கள் வழங்க வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
பணிகளை விரைந்து செய்ய தரமான மடிக்கணினி பிரின்டர்கள் வழங்க வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
பணிகளை விரைந்து செய்ய தரமான மடிக்கணினி பிரின்டர்கள் வழங்க வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 26, 2025 12:30 AM
விருதுநகர்:
தமிழகத்தில் சான்றுகள் வழங்குவது, பட்டா மாறுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து செயல்படுத்த மாநில அரசு தரமான மடிக்கணினிகள், பிரின்டர்களை வழங்க வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் ஆர்.டி.ஓ.,விடம் விண்ணப்பிக்கும் தாமத பிறப்பு, இறப்பு விண்ணப்பங்கள் பெற ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து இருந்து பணி நாட்களில் விடுமுறை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க கிராம ஆர்.ஐ., அலுவலகம் அருகே உள்ள அரசு இசேவை மையங்கள் மூலம் கட்டணமில்லா விண்ணப்ப பதிவேற்றம் செய்யும் வசதியை ஏற் படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப் படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் விளைச்சல் அளவுகளை கணக்கிட்டு நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி முடிவுகளை இறுதி செய்யும் முடிவுகளில் வி.ஏ.ஓ.,க் கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
விளைநிலங்களுக்கு சென்று விவசாய விபரங்களை இணையத்தில் பதிவிட டிஜிட்டல் கிராப் சர்வே செய்வதற்கு காரிப், ராபி, தாலடி, சம்பா ஆகிய பருவகால சாகுபடி கணக்கெடுப்புகளுக்கு அதிக மின் தேக்கு திறன், உயர் வெப்ப நிலையில் இயங்கக்கூடிய தரமான டேப்லெட் உபகரணங்கள் அனைத்து வி.ஏ.ஓ.,க் களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் வலி யுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து விருதுநகரில் வி.ஏ.ஒ., முன்னேற்ற சங்க நிர்வாகி பத்மநாதன் கூறியதாவது: மக்களுக்கு சான்றுகள் வழங்கும் பணியில் உள்ள ஆர்.ஐ., மற்றும் 12 ஆயிரத்து 600 வி.ஏ.ஓ.க்களுக்கு இன்னும் கணினி, பிரின்டர்களை அரசு முழுமையாக வழங்கவில்லை.
வழங்கப்பட்டவைகளும் பழுதுபடுகிறது. அவற்றை திரும்ப பெற்றுக் கொண்டு தரமான எளிதில் மாற்று உதிரிபாகங்கள் கிடைக்கும் முன்னணி நிறுவனங்களின் தரமான மாடல் மடிக்கணினிகள், அதிக பிரதிகள் எடுக்கும் தரமான பிரிண்டர்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.