/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைக்காலங்களில் பாலப்பணிகள் --கடும் அவதியில் மக்கள்
/
மழைக்காலங்களில் பாலப்பணிகள் --கடும் அவதியில் மக்கள்
மழைக்காலங்களில் பாலப்பணிகள் --கடும் அவதியில் மக்கள்
மழைக்காலங்களில் பாலப்பணிகள் --கடும் அவதியில் மக்கள்
ADDED : ஜன 14, 2024 11:36 PM
ராஜபாளையம் : நீர்நிலைகளைக் கடந்து செல்வதற்காக தொடங்கப்பட்ட புதிய பாலப்பணிகள் மழை காலங்களில் தொடங்கியுள்ளதால் தற்காலிக சாலைகள் உடைபட்டு மக்களுக்கு தொடர் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ராஜபாளையம் தாலுகாவில் சாலைகளில் குறுக்கிடும் நீர் நிலைகளை கடந்து செல்வதற்கான தரைப்பாலங்களை மேம்பாலங்களாக உயர்த்தும் பணிகள் வாகைக்குளம்பட்டி, தெற்கு வெங்காநல்லுார், நத்தம் பட்டி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மழை காலத்திற்கு முன்பு தொடங்காமல் இப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதால் நத்தம்பட்டி பாலத்தை தவிர மற்ற தற்காலிக மாற்றுப்பாதை இரண்டும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியும், வாகை குளம் பட்டியில் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் பாலப் பணி ஒப்புதல் பெற்று ஆறு மாதங்களுக்குப்பின் மழை காலத்தில் ஆரம்பித்ததால் புதிய பாலத்திற்கான பணிகளும் தற்போது வரை தொடங்க முடியாத நிலை உள்ளது.
இனி வரும் காலங்களில் பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க மழைகாலங்களில் தவிர்த்து பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.