/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உடைபட்ட கண்மாய் கரையால் --தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
/
உடைபட்ட கண்மாய் கரையால் --தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
உடைபட்ட கண்மாய் கரையால் --தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
உடைபட்ட கண்மாய் கரையால் --தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
ADDED : ஜன 30, 2025 10:36 PM

சத்திரப்பட்டி; சத்திரப்பட்டி அருகே ஏற்கனவே சேதம் அடைந்த கண்மாய் கரையை முறையாக பலப்படுத்தாததால் பாசனத்திற்கு முழு அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சத்திரப்பட்டி அருகே சமுசிகாபுரம் ஊராட்சி வ.உ.சி நகர் மேற்கே மேலஇலைப்பை குளம் கண்மாய் அமைந்துள்ளது. சோழபுரம் கிராமம் செங்குளம் கண்மாயிலிருந்து நீர்வரத்து பெற்று 100 ஏக்கருக்கும் அதிகமாக பாசன பகுதிகளை கொண்டது. 2023ல் கனமழை காரணமாக பாசன மடை அருகே உடைப்பு ஏற்பட்டது.
தற்காலிக தீர்வாக ஊராட்சி நிர்வாகம், சமூக ஆர்வலர் சார்பில் உடைப்பு சரி செய்யப்பட்டு அதன்பின் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுமான பணி நடந்தது. இந்நிலையில் தடுப்புச் சுவர் போதிய பலமின்றி அதன் அருகே கரைப்பகுதி தளர்வு ஏற்பட்டு உடனடியாக மண் கொட்டப்பட்டு சரி செய்யப்பட்டது. கண்மாய் கரை உயரம் இன்றி காணப்படுவதால் முழுமையாக தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து விவசாயி கணேசன்: கண்மாய் ஒட்டிய ஒரு பகுதி முழுவதும் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தடுப்புச் சுவர் பணிகள் போதிய பலமின்றி நடந்துள்ளது. இதனால் கண்மாயில் நீர் முழுமையாக தேக்கினால் குடியிருப்புகளிலோ விவசாய நிலங்களோ உடைப்பு ஏற்படும் என்ற சூழல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்காமல் அருகே உள்ள கானாக்குளம் கீழஇலைப்பை குளம் கண்மாய்க்கான தண்ணீரையும் தேக்கி அனுப்ப வழியில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

