ADDED : ஆக 24, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 25-
அருப்புக்கோட்டையில் ரோடு அருகே தாமிரபரணி குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுகிறது.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டை - சுக்கிலநத்தம் ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கு பாலத்தின் பக்கத்தில் பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் பீய்ச்சி அடிக்கிறது. ஏற்கனவே கிராம பகுதியில் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் உள்ள நிலையில், குழாய் உடைந்து குடிநீர் 2 நாட்களாக வெளியேறுவதாக மக்கள் புலம்புகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
