ADDED : ஆக 24, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக.25-
மல்லி சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில், 2026-–2028ம் கல்வி ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
தாளாளர் திலீபன் ராஜா தலைமை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். நிர்வாக அலுவலர் தர்மராஜ், மாணவ ஆசிரியர்கள் நாளைய ஆசிரியராக எவ்வாறு செயல்பட வேண்டும், எவ்வாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என விளக்கமளித்தார்.
விழா ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கவிதா மீனாம்பிகை, சசிகுமார், கவிதா, சுகந்தபிரியா செய்திருந்தனர். நிகழ்ச்சியை மாணவ ஆசிரியர்கள் எழிலரசி , ஜோதி அக்ஷயா தொகுத்து வழங்கினர். பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்
