/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருவோருக்கு தொல்லை கொடுக்கும் புரோக்கர்கள்
/
சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருவோருக்கு தொல்லை கொடுக்கும் புரோக்கர்கள்
சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருவோருக்கு தொல்லை கொடுக்கும் புரோக்கர்கள்
சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருவோருக்கு தொல்லை கொடுக்கும் புரோக்கர்கள்
ADDED : செப் 24, 2024 04:12 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு பட்டாசு வாங்க வரும் வெளிமாவட்டக்காரர்கள், வெளியூர்க்காரர்கள் புரோக்கர்களால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளிக்கு இன்னும் 47 நாள்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நடந்து வருகிறது. பட்டாசு வாங்குவதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், மக்கள் சிவகாசி வருகின்றனர்.
சிவகாசிக்குள் வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட கார் வந்தவுடன், அந்த வாகனத்தினை மறைக்கும் புரோக்கர்கள் சிலர், கமிஷனுக்கு ஆசைப்பட்டு, அதிக தள்ளுபடியில் பட்டாசு வாங்கி தருவதாக நெருக்கடி கொடுக்கின்றனர். என்ன தேவைக்காக சிவகாசி வந்தார்கள் என தெரியாமலேயே அவர்களை பாடாய்ப் படுத்துகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை விட்டு இறங்குபவர்களை, அவர்கள் உள்ளூர்காரரா, வெளியூர்காரரா என தெரியாமலேயே அவர்களையும் பட்டாசு வாங்க வற்புறுத்துகின்றனர்.
இவர்களை தங்களுக்கு தெரிந்த ஒரு சில பட்டாசு கடைகளுக்கு அழைத்துச் சென்று அதிக தள்ளுபடி எனக்கூறி பட்டாசு வாங்க வைக்கின்றனர். இதனால் சிவகாசி வருகின்ற வெளி மாவட்டக்காரர்கள் எரிச்சல் அடைகின்றனர். பெரும்பாலும் இங்கு பட்டாசு வாங்க வருபவர்கள் விசாரித்த பின்னரே வருகின்றனர். ஆனாலும் ஒரு சில புரோக்கர்கள் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.

