ADDED : ஜன 07, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாததுார்: சாத்துார் மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி ஜீவகனி, 45.
இவரது தந்தைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றார். இவரது அண்ணன் பனையடிபட்டி பன்னீர்செல்வம், 55. அவர் மகன்கள் ரகுபதி, 27. பாலா 25. ஆகியோர் ஜன.5 வீட்டிற்கு வந்து வீட்டை காலி செய்து தருமாறு கூறி ஜீவகனியையும் அவரது கணவர் சேகரையும் தாக்கி வீட்டை விட்டு வெளியே துரத்தி கதவை பூட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.