/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சொத்துப்பிரச்னையில் அக்காவை கொன்ற தம்பி
/
சொத்துப்பிரச்னையில் அக்காவை கொன்ற தம்பி
ADDED : ஏப் 04, 2025 06:13 AM

விருதுநகர்: விருதுநகரில் சொத்துப்பிரச்னை காரணமாக உடன் பிறந்த அக்காவை தம்பி வெட்டிக்கொன்றார்.
விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரம் திருமணி 45. இவரது கணவர் பிச்சார்மூர்த்தி 7 மாதங்களுக்கு முன் உடல் நலமின்றி இறந்த நிலையில் இளைய மகனுடன் தனியாக வசித்து வந்தார். இவரதுதம்பி பெரியசாமி 43, தன் வீட்டின் முன் உள்ள இடத்தை வாடகைக்குப் பேசி அக்கா ஆடு, கோழி வளர்க்க உதவினார்.
இந்நிலையில் அவரதுதந்தை நாகராஜன், நான்கு மாதங்களுக்கு முன் திருமணி, அவரது தங்கை ஆனந்தம்மாள் ஆகியோருக்கு தனது இரு வீடுகளை உயில் எழுதி வைத்தார். இதனால் பெரியசாமி முன்விரோதம் கொண்டார்.
கணவர் இறந்தபின் திருமணியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெரியசாமி தன் வீட்டருகே வருவதை தவிர்க்குமாறும், ஆடு கோழிகளை விற்று எங்காவது சென்றுவிடுமாறும் அக்காவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்.
சம்பவத்தன்று இரவு தம்பியின் வீட்டருகே திருமணி கோழிகளை மேய்ச்சலுக்கு விட்ட நிலையில் ஆத்திரமடைந்த பெரியசாமி அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
விருதுநகர் கிழக்கு போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

