/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேட்டமலையில் பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதி

ADDED : டிச 27, 2024 04:27 AM
சாத்துார்: சாத்துார் மேட்டமலை ஊராட்சியில் பி.எஸ். என்.எல்., அலைபேசி சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான பேர் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் சரிவர கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது பேசிக் கொண்டிருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்படுவதும் அலைபேசி ஆன் பண்ணி இருந்தாலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அழைப்பவர்களுக்கு பதில் கிடைக்கிறது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் வசதி சரிவர கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ஊராட்சி பகுதியில் திடீரென மின்தடை ஏற்படும் போது அலைபேசியின் சிக்னல் முற்றிலும் கிடைக்காமல் போய்விடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் இன்டர்நெட் வசதி அவசியமான ஒன்றாக உள்ளதால் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தடையின்றி சேவை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.