/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 12, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., டி.ஜி.எம்., அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல், களவு போகும் சொத்துக்களை மீட்டெடுத்தல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகி இளமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலர் ஜெயக்குமார், மாநில உதவி தலைவர் சமுத்திரகனி, நிர்வாகிகள் குருசாமி, ரவீந்திரன், முன்னாள் கிளைச் செயலாளர் ஜெயபாண்டியன், சிவகாசி செயலர் கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.