/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை ஓரத்தில் கட்டட இடிபாடுகள், மணல் குவியல் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 07, 2025 02:37 AM

விருதுநகர், : விருதுநகர் - சாத்துார் நான்கு வழிச்சாலை ஓரங்களில் கட்டட இடிபாடுகள், மணல், குப்பை கிடங்கு தொடர்ந்து சிலர் கொட்டி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகரில் இருந்து சாத்துார் செல்லும் நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோடு ஓரங்களில் ஊராட்சி நிர்வாகங்கள் குப்பை தொட்டி வைத்து குப்பை கிடங்காக மாற்றி வந்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் தற்போது குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது கவுசிகா நதி கடந்து சாத்துார் நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு ஓரத்தில் ஊராட்சிகளில் உள்ள வாறுகாலில் சேகரிக்கப்படும் மணல் குப்பை மொத்தமாக மணல் குவியல்களாக கொட்டப்படுகிறது. இதற்கு அருகே சிலர் கட்டட இடிபாடுகளையும் கொட்டுகின்றனர்.
இதனால் சர்வீஸ் ரோடு ஓரங்கள் மணல் குவியல் குப்பை கிடங்குகள், கட்டட இடிபாடுகளாக மாறும் நிலை உண்டாகியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இரவோடு இரவாக டிராக்டர்களில் வந்து கொட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ரோடு ஓரங்களை சுத்தமாக வைத்திருக்க முடியும்.
எனவே நான்கு வழிச்சாலை ஓரங்களில் கட்டட இடிபாடுகள், மணல் குவியலில் குப்பையை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.