/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் உள்ள காலாவதி கட்டடங்களை அகற்றுங்கள்; சமூக விரோத செயல்களோடு விபத்திற்கும் வாய்ப்பு
/
இடியும் நிலையில் உள்ள காலாவதி கட்டடங்களை அகற்றுங்கள்; சமூக விரோத செயல்களோடு விபத்திற்கும் வாய்ப்பு
இடியும் நிலையில் உள்ள காலாவதி கட்டடங்களை அகற்றுங்கள்; சமூக விரோத செயல்களோடு விபத்திற்கும் வாய்ப்பு
இடியும் நிலையில் உள்ள காலாவதி கட்டடங்களை அகற்றுங்கள்; சமூக விரோத செயல்களோடு விபத்திற்கும் வாய்ப்பு
UPDATED : ஜூலை 09, 2025 08:24 AM
ADDED : ஜூலை 09, 2025 12:59 AM

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அலுவலகப் பணிகள் மக்களின் நலனுக்காக, பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள், பொது கழிப்பறைகள், நவீன சுகாதார வளாகங்கள், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், வி.ஏ.ஓ ., அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
கோடிக்கணக்கான நிதியில் கட்டப்படும் கட்டடங்கள் 25 ஆண்டுகளை கடந்த பின்பும் காலாவதியான நிலையில் உள்ளன. அரசு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலாவதியான கட்டடங்களுக்கு பதிலாக மீண்டும் புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்குகிறது.
ஏற்கனவே காலாவதியான கட்டடங்களை இடித்து விட்டு புதியதாக கட்ட நடவடிக்கை எடுப்பதில்லை. சேதமடைந்த கட்டடங்களை விட்டுவிட்டு வேறு இடத்தில் புதிய கட்டடங்களை கட்டுகின்றனர்.
இதனால் பழைய கட்டடங்கள் நாளுக்கு நாள் சேதமடைந்தும், முட்புதர்கள் செடிகள் வளர்ந்தும், பாம்புகள் விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறி விடுகிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடு இன்றி சேதம் அடைந்த கட்டடங்கள் பல உள்ளன.
32 ஊராட்சிகளில் காலாவதியான இடிக்கப்பட வேண்டிய பொதுக்கழிப்பறைகள், பயன்பாடு இன்றி சேதம் அடைந்துள்ள இ- சேவை மையங்கள், பள்ளி கட்டடங்கள் பல உள்ளன.
சுக்கிலநத்தம் ஊராட்சியில் சேதமடைந்த கலையரங்கம், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் இடியும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வடக்குநத்தம் ஊராட்சியில் அரசு கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து இடிக்கப்படாமலேயே பல ஆண்டுகளைக் கடந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
அரசு புதிய கட்ட டங்களை கட்டுவதில் இருக்கும் அக்கறை காலாவதியான பழைய கட்டடங்களை உடனடியாக அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பழைய கட்டடங்களை இடித்து விட்டு அந்த இடத்திலேயே புதிய கட்டடங்களை கட்டுவதற்கும் உத்தரவு இடுவது இல்லை. இதனால் மாவட்டத்தில் இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டடங்கள் அதிக அளவில் உள்ளது.
உடனுக்குடன் இவற்றை அகற்றாமல் விட்டதால், கோடிக்கணக்கான நிதிகளை செலவு செய்து இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளில் மோசமான இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலத்திற்குள் இவற்றை அகற்றாவிடில், கட்டடம் மேலும் சேதமடைந்து விழும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.