/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொளுத்துது வெயில்: ‛'டெங்கு' அபாயம் மாவட்டங்களில் விழிப்புணர்வு
/
கொளுத்துது வெயில்: ‛'டெங்கு' அபாயம் மாவட்டங்களில் விழிப்புணர்வு
கொளுத்துது வெயில்: ‛'டெங்கு' அபாயம் மாவட்டங்களில் விழிப்புணர்வு
கொளுத்துது வெயில்: ‛'டெங்கு' அபாயம் மாவட்டங்களில் விழிப்புணர்வு
ADDED : ஆக 02, 2025 12:27 AM

விருதுநகர்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் தேவைக்கு சேமித்து வைத்த தண்ணீரில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் உற்பத்தியாகி 'டெங்கு காய்ச்சல்' பரவும் அபாயம் உள்ளது. மாவட்டங்கள் தோறும் 'டெங்கு' பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நடப்பாண்டு அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து தற்போது வரை குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடான பகுதிகளில் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களால் வாரத்திற்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தேவைக்காக பிளாஸ்டிக் டிரம்கள், குடங்கள், பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். நீண்ட நாட்கள் சேமித்து வைத்துள்ள குடிநீரில் ஏ.டி.எஸ்., கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு வைரசுடன் உருவாகி காய்ச்சலை பரப்புகின்றன.
வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் யாரும் கொதிக்க வைத்து தண்ணீரை பருகுவது இல்லை. சேமித்து வைத்த தண்ணீரை நேரடியாக பருகுவதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எஸ்., கொசுக்கள் மூன்று வாரங்கள் வரை உயிர்வாழும் என்பதால் நன்னீரில் நுாற்றுக்கணக்கான முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து நோய்பரவலை ஏற்படுத்துகிறது.
இதையடுத்து கொளுத்தும் வெயிலால் டெங்கு காய்ச்சல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், பள்ளி, கல்லுாரிகள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து முறையான வழிகாட்டுதல் வழங்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இப்பணிகளை மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.