/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றத்தால் நோயாளிகள் பரிதவிப்பு மாவட்ட நிர்வாக நடவடிக்கை அவசியம்

ADDED : ஆக 02, 2025 12:27 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளின் பெயர் பலருக்கு மாறியுள்ளதால் பரிசோதனை, சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பிரதமர் காப்பீட்டு திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் முதல்வர் காப்பீட்டு திட்டம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் காப்பீட்டு திட்டத்தை, ரேஷன் கார்டுகளுடன் ஆன்லைனில் சேர்க்கும் நடவடிக்கை மாநிலம் முழுவதும் நடந்தது.
இந்த பணிகளில் ஏற்பட்ட பிரச்னையால் தற்போது முதல்வர் காப்பீட்டு திட்ட பயனாளிகளில் பலருக்கு பெயர் மாறியுள்ளது.
அதாவது பயனாளியின் பெயருக்கு பதிலாக மற்றொரு நபரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பரிசோதனை, சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அலைபேசி எண் மூலம் ஓ.டி.பி., பெற்று விவரங்களை சரிபார்க்கும் போது தான் பயனாளியின் பெயர் மாறியுள்ளது தெரிகிறது.
இதன் பின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட பதிவு மையத்திற்கு நேரில் சென்று பெயர் மாற்றத்தை சரிசெய்த பின்பு தான் பரிசோதனை, சிகிச்சை பெற முடிகிறது.
இது போன்ற பெயர் மாற்றத்திற்காக 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
ஆனால் இப்பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பரிசோதனை, சிகிச்சை கிடைக்காமல் போனால் உயிருக்கு ஆபத்தாக அமையும்.
எனவே முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் நடந்துள்ள பயனாளிகளின் பெயர் மாற்ற குளறுபடிகளை உடனடியாக சரிசெய்யவும், சேவை மையத்தில் காத்திருப்பவர்களுக்கு உடனடியாக பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.