/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் விபத்தில் ஒருவர் பலி வேதனையில் டிரைவர் தற்கொலை
/
பஸ் விபத்தில் ஒருவர் பலி வேதனையில் டிரைவர் தற்கொலை
பஸ் விபத்தில் ஒருவர் பலி வேதனையில் டிரைவர் தற்கொலை
பஸ் விபத்தில் ஒருவர் பலி வேதனையில் டிரைவர் தற்கொலை
ADDED : நவ 21, 2024 01:55 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன் தான் பஸ் ஓட்டிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான மன வேதனையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்துார் கொந்தராயன் குளத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 52, இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நவ., 14ல் செங்கோட்டையிலிருந்து போடி செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றபோது கடையநல்லுார் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மனவேதனையடைந்த அவர் நவ.,15 அதிகாலை விஷம் குடித்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.