/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு திருப்பரங்குன்றம் வழியாக பஸ்
/
காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு திருப்பரங்குன்றம் வழியாக பஸ்
காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு திருப்பரங்குன்றம் வழியாக பஸ்
காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு திருப்பரங்குன்றம் வழியாக பஸ்
ADDED : டிச 21, 2025 05:51 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பெரிய கார்த்திகை, வைகாசி விசாகம், விசேஷ நாட்கள், மற்ற நாட்களிள் சுவாமி தரிசனம் செய்ய திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது மதுரை சென்று மாற்று பஸ் பிடித்து செல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தடுத்த பஸ்களை பிடித்துச் செல்ல வேண்டி இருப்பதால், கூடுதல் செலவு ஏற்படுவதுடன், வீண் அலைச்சல் ஏற்படுவதாக பயணிகள் புலம்புகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து அவனியாபுரம், திருப்பரங்குன்றம், வழியாக மதுரைக்கு டவுன் பஸ்கள் இயக்கினால் கோயிலுக்கு எளிதில் சென்று வர முடியும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அது மட்டுமல்ல திருப்பரங்குன்றம் பகுதி கல்லூரிக்கு மாணவர்கள் எளிதில் சென்று வர முடியும். அப்பகுதி பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன் வருவர்.
இதனை கருத்தில் கொண்டு, காரியாபட்டியில் இருந்தும், மதுரையில் இருந்தும் திருப்பரங்குன்றம் வழியாக டவுன் பஸ்களை இயக்கினால் பக்தர்கள் பயன்பெறுவதோடு, அப்பகுதி விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பஸ் இயக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

