/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய் மதகு உடைப்பை கண்டித்து பஸ் மறியல்
/
கண்மாய் மதகு உடைப்பை கண்டித்து பஸ் மறியல்
ADDED : ஜன 11, 2024 04:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் விழுந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் சிலர் கண்மாய் மதகினை உடைத்து தண்ணீரை அதிகளவில் திறந்து விடுகின்றனர். இதனால் தைலாகுளம் கிராம தெருக்களில் மழை நீர் புகுந்து விடுகிறது.
இது போல் பலமுறை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மதகு உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தைலாகுளம் மக்கள் நேற்று காலை 8 :40 மணியளவில் சிவகாசி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானம் செய்தனர். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிவகாசி ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

