/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்
/
அருப்புக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்
ADDED : மே 31, 2025 12:24 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் செய்தி குறிப்பு:
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் இயங்கி வந்தது. இதை இடித்து புதியதாக கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்டில் பணிகள் முடிவடைந்த நிலையில் தரைதளம் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்று முதல் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோடு நெசவாளர் காலனி எதிர்ப்புறம் உள்ள சி.எஸ்.ஐ., திடலுக்கு தற்காலிகமாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகர, கிராம, வெளியூர் பஸ்கள் இங்குஇருந்து இயக்கப்படும்.
பொதுமக்கள் தற்காலிக பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்.