/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்
/
செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்
செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்
செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்
ADDED : பிப் 23, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியாபுரம் இந்திரா நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி அப்பகுதியினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி இந்திரா நகரில் ரோடு, வாறுகால், குடிநீர் வசதி , சுகாதார வளாகம் உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அப்பகுதியினர் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தி, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.