/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் வயலுக்குள் இறங்கிய பஸ்
/
ஸ்ரீவி.,யில் வயலுக்குள் இறங்கிய பஸ்
ADDED : பிப் 12, 2025 06:28 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மதுரைக்கு சென்ற தனியார் பஸ் அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் இருந்த 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக மதுரைக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆயுதப்படை மைதானம் அருகே பஸ் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கம் 3 அடி பள்ளத்தில் இருந்த வயலுக்குள் இறங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் காயமின்றி தப்பினர்.
பின்னர் வேறு பஸ்சில் பயணிகள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.