/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் படிக்கட்டு பயணம்; விபரீதம் தெரியாத மாணவர்கள்
/
பஸ் படிக்கட்டு பயணம்; விபரீதம் தெரியாத மாணவர்கள்
ADDED : ஆக 19, 2025 12:41 AM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதிகள் இல்லாததால் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கின்றனர்.
அருப்புக்கோட்டைக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு திருச்சுழி, நரிக்குடி, தென்பாலை, வட பாலை, பரளச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பஸ்களில் வந்து செல் கின்றனர்.
ஆனால் அவர்ரகள் வந்து செல்வதற்கு வசதியாக பள்ளி நேரங்களில் பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட அளவில் பஸ்கள் வந்து செல்வதால், அதிகமான கூட்டத்தில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
விபரீதம் தெரியாமல் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் நிர்வாகம், பெற்றோர்,டராபிக் போலீசார்கள் அறிவுறுத்த வேண்டும். -மாவட்ட நிர்வாகம் பள்ளி நேரங்களில் அக்கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.