/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதர் மண்டி கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்
/
புதர் மண்டி கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்
ADDED : ஜூன் 28, 2025 11:16 PM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் புறக்காவல் நிலையங்கள் பயன்பாடு இன்றி புதர்கள் மண்டி கிடக்கிறது. அருப்புக்கோட்டையில் நடைபெறும் கொள்ளை, செயின் பறிப்புகள், டூ வீலர்கள் திருடு, வழிப்பறிகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததை ஒட்டி போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க நகர எல்லையில் புற காவல் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. விருதுநகர் ரோடு, பாலையம்பட்டி சந்திப்பு, காந்திநகர் சந்திப்பு, பந்தல்குடி ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்ட இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிய கிடக்கிறது. இவற்றில் காவலர்கள் இருப்பதும் இல்லை. இதனால் புறக்காவல் நிலையங்கள் அனைத்தும் புதர்கள் மண்டி கிடக்கிறது.
புற காவல் நிலையங்களை உடனடியாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து போலீசா ரோந்து பணியை தீவிர படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.