தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வணிக சவால்கள் கருத்தரங்கம்

வணிக சவால்கள் கருத்தரங்கம்

வணிக சவால்கள் கருத்தரங்கம்


ADDED : பிப் 20, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி,- சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி இளங்கலை வணிகவியல் நிர்வாகிகள் துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் சார்பில் வணிக சவால்கள் மற்றும் தாக்கங்களில் சமூக கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் இரு நாட்கள் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மேலாண்மை துறை பேராசிரியர் காசிலிங்கம் துவக்கி வைத்தார். பெங்களூர் கிறிஸ்து பல்கலைக்கழகம் மேலாண்மை துறை பேராசிரியர் குமார் சந்தர், கேரளா கோட்டையம் செயிண்ட்கிட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பேராசிரியர் எல்ஜின் அலெக்சாண்டர், பெங்களூர் செயின் கிளாரெட் கல்லுாரி வணிகவியல் ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பாளர் சிவ முருகன், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவர் நல மையம் முதன்மையர் ராஜசேகரன் பேசினர்.

27 கல்லுாரிகளை சேர்ந்த 227 மாணவர்கள் பங்கேற்று கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் நாகேஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us