ADDED : ஜன 30, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை ,அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், துணை போக்குவரத்து செயலர் அருண் முன்னிலை வகித்தனர். முதல்வர் தில்லை நடராஜன் வரவேற்றார். பேச்சாளர் துரைப்பாண்டியன் கலந்து கொண்டு வணிகவியல் மூலம் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவது குறித்தும், கருத்துக்களையும் விளக்கினார்.
மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. துறை தலைவி சூர்யா கலா நன்றி கூறினார்.- -