/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிஜிட்டல் பயிர் சர்வே எடுப்பதில் மும்முரம்
/
டிஜிட்டல் பயிர் சர்வே எடுப்பதில் மும்முரம்
ADDED : நவ 13, 2024 07:24 AM

மும்முரம்
மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் டிஜிட்டல் பயிர் சர்வே நடந்து வருகிறது. விளைநிலங்களில் விவரம், பயிர் செய்த படம் ஆகியவற்றை கணினியில் பதிவேற்றி அரசின் திட்டங்களுக்காக இந்த டிஜிட்டல் பயிர் சர்வே நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடந்து வரும் இந்த சர்வே பணி விருதுநகர் மாவட்டத்தில் நவ. 9 முதல் துவங்கி. நவ.30 வரை நடக்கிறது.
இதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், பொறியியல் துறைகளின் தொழில்நுட்பம் சார்ந்த, சாராத அலுவலர்கள் தலைமையில் மதுரை, தேனி வேளாண் கல்லுாரி மாணவர்கள், பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று கள ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களிடம் அலைபேசி செயலி மூலம் விளைநிலங்களில் ஜி.பி.எஸ்.,ஐ நிர்வகித்து வைத்து இதை செயல்படுத்துகின்றனர்.
இதனால் நில அமைவிடம், அதன் புகைப்படம் ஆகியவை துல்லியமாக பதிவேற்றப்படுகின்றன.
திட்டங்கள் செயல்படுவதிலும், தேவையான புதிய முன்னெடுப்புகளை எடுக்கவும் இது உதவும். குறிப்பிட்ட நில புலன்களில் உள்ள விவசாயிகள் என்ன பயிர் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
பயிர்க்கடன் வழங்குவதிலும், பயிர்க்காப்பீடு செய்வதில் எந்தெந்த பகுதிகள் தகுதியானவை என்பதை அறிவதிலும் இது உதவும். மேலும் நில புலன்களின் வரையறைக்கு ஏற்ப உரம், பூச்சி மருந்து எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிவுறுத்த முடியும்.
மாதிரி சர்வே நவ.7ல் நடத்தி முடிந்து விட்ட நிலையில் தற்போது கிராமங்கள் தோறும் துரிதமாக முழு நேர சர்வே செய்து வருகின்றனர்.
வருவாய்த்துறையினர் ஈடுபடாத நிலையில் மாணவர்களின் களப்பணி இதில் முக்கிய பங்காற்றுகிறது.
கிராம விளைநிலங்களில் டிஜிட்டல் பயிர் சர்வே
திட்டங்களில் துல்லியம் கிடைப்பதால் பலன்