/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்கம்பத்தில் கட்டப்படும் கேபிள் வயர்கள்
/
மின்கம்பத்தில் கட்டப்படும் கேபிள் வயர்கள்
ADDED : ஜன 22, 2025 06:09 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மின் கம்பத்தில் கேபிள் வயர்களை ஆபத்து உணராமல் கட்டுவதை மின்வாரியத்தினர் கண்டு கொள்வதில்லை.
அருப்புக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் கேபிள்கள் மூலம் வீடுகளுக்கு டிவி இணைப்புகள் கொடுக்கப்படுகிறது. இந்த கேபிள்களை ஒரு சில பகுதிகளில் மின்வாரிய கம்பத்தின் வழியாக கொண்டு செல்கின்றனர். அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் சந்திப்பு அருகில் சர்வீஸ் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் டி.வி. கேபிள் வயர்களை பொருத்தும் பணி நடந்தது.
உயர் அழுத்த மின்கம்பி அருகில் இருப்பதை உணராமல், எந்தவித பாதுகாப்பும் இன்றி அதன் அருகிலேயே கேபிள் வயர்களை கட்டுகின்றனர். காற்று பலமாக அடித்து மின் கம்பியில் கேபிள் வயர் பட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மின்வாரியத்தினருக்கு அறிவுறுத்த வேண்டும்.