ADDED : அக் 23, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விதை சான்று உதவி இயக்குனர் கோகிலா செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் உயிர்ம விளைப்பொருட்களை உற்பத்தி செய்பவர், உயிர்ம முறையில் விவசாயம் செய்வதற்கான சான்று பெற தமிழக அரசு விதைச்சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்புத்துறை, மத்திய அரசின் அபீடா நிறுவனத்தின் அங்கீகாரம் அடிப்படையில் தனிநபராகவோ, குழுவாகவோ, நிறுவனம் பிரிவிலோ பதிவு செய்து உயிர்ம (இயற்கை) வேளாண்மை சான்று பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பத்தை www.tnocd.net என்ற இணையத்தில் பதிவிறக்கலாம். சான்று பெற விரும்பும் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் விதைச்சான்றளிப்பு, உயிர்மசான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்