ADDED : அக் 23, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் நாள் முழுவதும் மழை பெய்த நிலையில், நேற்று காலை முதல் காலநிலை மாறி வெயில் வாட்டியது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில், மாலையில் மழை என தொடர்ந்து பெய்து வந்தது.
ஆனால் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி அன்றும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் காலை முதல் கருமேக கூட்டங்கள் சிறிதளவு கூட தென்படாமல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை விடை பெற்று கதகதப்பான சூழல் உருவானது. தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் பணியிடங்களுக்கு சென்றனர்.