ADDED : அக் 24, 2025 02:23 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: ராபி பருவ (அக். முதல்) பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்.
காப்பீடு கட்டணத்தை கடைசி நாளாக கொண்டு ஏக்கருக்கு சம்பா நெல் ரூ.491, சோளம் ரூ.136 டிச. 16க்குள், மக்காச்சோளம் ரூ.319, கம்பு ரூ.160, துவரை ரூ.252, பருத்தி ரூ.473, நவ. 30க்குள்ளும், பாசி பயறு ரூ.251, உளுந்து ரூ.314, நவ. 15க்குள்ளும், நிலக்கடலை ரூ.314, சூரியகாந்தி ரூ.188,டிச. 30க்குள்ளும், எள் ரூ.122, 2026 ஜன. 31க்குள்ளும், கொத்தமல்லி ரூ.583 ஜன. 17, மிளகாய் ரூ.1109, வெங்காயம் ரூ.1573 ஜன. 31, வாழை ரூ.4426 பிப். 28க்குள்ளும் என செலுத்தி எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும், என்றார்.

