ADDED : அக் 24, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் செய்திக்குறிப்பு: ரூ.10 கோடி வரை வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களுக்கான புதிய மதிப்பு கூட்டு மையங்களை நிறுவ முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள் , எஸ்.சி., பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் என்று அதிகபட்சம் ரூ.1.5 கோடிக்கு மானியம் வழங்கப்படும் . அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீதம் வட்டிமானியம் 5 ஆண்டுகளுக்கு பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் வேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆவணங்களுடன் அணுகலாம்., என்றார்.

