/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுபான்மையினர் கடன் பெற அழைப்பு
/
சிறுபான்மையினர் கடன் பெற அழைப்பு
ADDED : மே 19, 2025 05:26 AM
விருதுநகர் : கலெக்டர் செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் ஆகியோருக்கு தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.