/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆலைகளின் உரிமம் புதுப்பிக்க அழைப்பு
/
ஆலைகளின் உரிமம் புதுப்பிக்க அழைப்பு
ADDED : அக் 21, 2024 04:32 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் உரிமம் புதுப்பித்தல், இதர நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளதால் விருதுநகர் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநர் எல்கைக்குட்பட்ட பதிவுபெற்ற ஆலைகள் 2025ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை ஆன்லைன் மூலம் www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் உரிமம் புதுப்பிக்க அக். 31 கடைசி நாள் ஆகும்.
உரிமக் கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். நவ. 1க்கு பிறகு தாமதக் கட்டணம் செலுத்தவேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்களது தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு இணையவழி முறையிலேயே வழங்கப்படும்.
உரிமம் புதுப்பிக்கப்பட்டவுடன் படிவம் -2 (3 நகல்கள் அதில் ஒன்றில் ரூ.5க்கான நீதிமன்ற கட்டண வில்லை), உரிம நகல் (படிவம்-4), இதர ஆவணங்களை கையொப்பமிட்டு அனுப்பி வைக்கவேண்டும் விவரங்களுக்கு 04562 269115 தொலைபேசி எண்ணை அழைக்கலாம், என்றார்.