UPDATED : நவ 01, 2026 05:47 PM
ADDED : நவ 01, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2026–27க்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
சிறப்பு பருவம் சம்பா நெல் – II பயிர் செய்யவுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும். இப்பயிருக்கு காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு ரூ.270. கடைசி நாள் டிச. 16 ஆகும். விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., அடங்கல், வங்கி பாஸ்புக் முதல் பக்க நகல், ஆதார் கார்டு ஆகியவை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும், என்றார்
