UPDATED : நவ 01, 2026 05:47 PM
ADDED : நவ 01, 2026 05:44 PM
காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அக்கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
காரியாபட்டி பகுதியில் சமீபத்தில் பருவ மழை காரணமாக கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, நீர் நிரம்பியுள்ளது. அதில் கொசு உற்பத்தியாகி பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது.
குறிப்பாக காரியாபட்டி அச்சங்குளத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வீரம்மாள், அக்சய கிருஷ்ணா, செல்வகுமார் உள்ளிட்ட பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பலருக்கு பரவுமோ என பீதி அடைந்தனர். சுகாதாரத் துறையினர் அக்கிராமத்தில் ஆய்வு செய்ய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் அக்கிராமத்தில் எலிக்காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
