/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விற்பனைக்கூடங்களில் இருப்பு வைக்க அழைப்பு
/
விற்பனைக்கூடங்களில் இருப்பு வைக்க அழைப்பு
ADDED : பிப் 03, 2025 04:51 AM
விருதுநகர்: விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி செய்திக்குறிப்பு:
விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளது.
நெல், மக்காச்சோளம், சோளம் கம்பு குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயறு, எள், நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி விதை, பருத்திவிதை முந்திரி, கரும்புவெல்லம், கொத்தமல்லி, மிளகாய் வத்தல் ஆகியவை அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளைப்பொருட்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை நடப்பதால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண், தோட்டக்கலை விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஆறு மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

