/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 08, 2025 01:19 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரீப் பருவத்தில் பயிரிடப்படும் மக்காச்சோளம் பயிருக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.425, சோளம் ரூ.182, பாசிப்பயறு, உளுந்து ரூ.336, பருத்தி ரூ.386, நிலக்கடலை ரூ.419 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தோட்டக்கலை பயிர்களில் ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ.1573, வாழை ரூ.4426 பயிர் காப்பீடு கட்டணமாக உள்ளது. பயிர் காப்பீடு செய்ய நிலக்கடலைக்கு ஆக. 30, உளுந்து, பாசிப்பயறு, சோளம், பருத்தி வகைகளுக்கு செப். 16, மக்காச்சோளத்திற்கு செப். 30 கடைசி நாள். தோட்டக்கலை பயிரான வெங்காயத்திற்கு செப். 1, வாழைக்கு செப். 16 கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.