UPDATED : நவ 17, 2026 06:11 PM
ADDED : நவ 17, 2026 06:04 PM
விருதுநகர்: விருதுநகர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு: அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களை பெற முகவரி சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியம். இந்திய அஞ்சல் துறை மக்களின் முகவரியை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சலக அடையாள அட்டை என்னும் சேவையை வழங்கி வருகிறது.
இச்சேவையை மக்கள் அருகில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டை, தேர்தல் கமிஷன், ரேஷன், நுகர்வோர் பாதுகாப்பு துறை, போலீசாரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்களை அருகில் உள்ள அஞ்சலகத்தில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.250 ஆகும். இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விபரங்களுக்கு சிவகாசி வணிகமேலாளரை 94882 74477 என்ற எண்ணில் அழைக்கலாம், என்றார்.
