ADDED : நவ 17, 2026 06:07 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: மத்திய, மாநில அரசுகள் நகர்புற உள்ளாட்சிகளுக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் மா. கம்யூ.,வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சிக் கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் ஜெயபாரத், மாவட்டச் செயலாளர் குருசாமி , செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சாராள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
