தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வேண்டும் அலைபேசி டவர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

வேண்டும் அலைபேசி டவர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

வேண்டும் அலைபேசி டவர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை


UPDATED : நவ 07, 2026 04:27 PM

ADDED : நவ 07, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 04:27 PM ADDED : நவ 07, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் குளோபல் வீ விட்டமின் நிறுவனத்தின் சார்பில் அத்தி கோயில் மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம், நிறுவனர் ஜெசிலா ஏஞ்சலின் தலைமையில் நடந்தது. இதில் மலைவாழ் மக்களுக்கு உடைகள், இனிப்புகளை எம்.எல்.ஏ. கார்த்திக் வழங்கினார்.

அப்போது எம்.எல்.ஏ.விடம் மலைவாழ் மக்கள் கூறியதாவது, அத்திகோயிலில் 90-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இங்கு அலைபேசி டவர் இல்லாததால் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியவில்லை. உறவினர்களுடன் பேச முடியவில்லை.

கடந்த காலத்தில் பலமுறை மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீங்களாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us