/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணியிடத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு முகாம்
/
பணியிடத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு முகாம்
ADDED : நவ 29, 2024 05:14 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் செய்திக்குறிப்பு:
வெளிமாநிலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் இணையதளம் www.tnuwwb.tn.gov.inல் பதிவு செய்ய விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையரால் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
எனவே மாவட்டத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களை கட்டுமான பணி நடக்கும் இடங்களிலே உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட உள்ளதால் தொழிலாளியின் பிறந்த தேதிக்கான ஆவணம், ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க கட்டுமான பணி செய்யும் நிறுவனங்கள், உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வெளிமாநில தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் தற்போதைய அலைபேசி எண் இணைக்கப்படாமல் இருந்தால் அதை இணைத்து வைக்க வேண்டும், என்றார்.