/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உங்களுக்கு உதவலாமா' திட்டம் அரசு மருத்துவனையில் துவக்கம்
/
உங்களுக்கு உதவலாமா' திட்டம் அரசு மருத்துவனையில் துவக்கம்
உங்களுக்கு உதவலாமா' திட்டம் அரசு மருத்துவனையில் துவக்கம்
உங்களுக்கு உதவலாமா' திட்டம் அரசு மருத்துவனையில் துவக்கம்
ADDED : நவ 15, 2024 06:18 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளின் சிரமத்தை போக்குவதற்காக நான் உங்களுக்கு உதவலாமா' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் வெளி நோயாளிகளுக்கான சீட்டை பதிவு செய்து விட்டு தங்கள் நோய்க்கான மருத்துவரை கண்டறிந்து சிகிச்சை பெறுவதில் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த பிரச்னையை சரிசெய்ய மருத்துவமனை நிர்வாகத்தால் அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளில் நான் உங்களுக்கு உதவலாமா' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மூன்று செவிலியர்கள், ஒரு பணியாளர் வெளிநோயாளிகளுக்கு உதவுவதற்கான பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வெளிநோயாளிகள் எந்த துறை மருத்துவரை அணுக வேண்டும், பரிசோதனை, மருந்தகத்திற்கான விவரங்களை கூறி உதவி புரிகின்றனர்.