/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா
/
தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படுமா
ADDED : மார் 08, 2024 12:28 PM
சாத்துார்: சாத்துாரில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. மக்கள் அதிகளவில் நடமாடும் முக்குராந்தல், காய்கனி மார்க்கெட் தெரு, வடக்கு ரத வீதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன. அவைகளுக்குள் சண்டை போடுவதால் அப்பகுதியில் செல்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் ரோட்டில் உலா வரும் கால்நடைகளும் தெரு நாய்களால் மிரண்டு ஓடும் நிலை உள்ளது.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

