ADDED : நவ 27, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு நேற்று காலை வந்த புருளியா (22605) எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்வகுப்பு பொதுப்பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த பச்சை நிற பேக்கில் 3 பார்சல்களில் மொத்தம் 4.5 கி கஞ்சா இருப்பதை கண்டறிந்து மீட்டனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

