ADDED : அக் 29, 2025 09:32 AM
நரிக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரை சேர்ந்தவர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை இளங்கோதை 65, உமாராணி 55, லட்சுமி 53, சோனைமுத்து 47, சரசு 40, யசோதை 57, திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி நிகழ்ச்சிக்கு சென்று நேற்று காரில் வீடு திரும்பினர். பரமக்குடி இளந்தகுலத்தைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் 29, காரை ஓட்டினார்.
அதிகாலை 2:30 க்கு பார்த்திபனூர் ரோட்டில் வந்த போது, நரிக்குடி அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அதில் இளங்கோதை, லட்சுமி பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் உட்பட மற்றவர்கள் லேசான காயத்துடன் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

