ADDED : செப் 13, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு மஞ்சம்மாள் பாலிடெக்னிக் எதிரே ஏ.பி.டி., நெக் ஷா புதிய கார் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
ராஜபாளையம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் திறந்து வைத்தார். ஏ.பி.டி., மாருதி துணைத் தலைவர் ராஜேஷ் ஜீவதாஸ் முன்னிலை வகித்தார். மனித வள மேலாளர் சண்முகநாதன், விற்பனை பிரிவு மேலாளர் கணேசன், ஏரியா மேலாளர் வருண் கார்க், மதுரை விற்பனை தலைவர் அவயத்தான், விற்பனை மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள முதல் ஷோரூமை முன்னிட்டு செப்.14 வரை கார் புக் செய்பவருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயம், கார் சர்வீஸ்களுக்கு வருபவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும், என நிர்வாகிகள் தெரிவித்தனர்.