/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்றால் கார்டு முடக்கம்
/
ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்றால் கார்டு முடக்கம்
ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்றால் கார்டு முடக்கம்
ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்றால் கார்டு முடக்கம்
ADDED : ஜன 19, 2024 04:28 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை முறைகேடாக பெற்று, கள்ளச்சந்தையில் விற்றால் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் ரேஷன் கார்டுகள் முடக்கம் செய்யப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 1011 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 6 லட்சம் கார்டுதாரர்களுக்கு விலையில்லா புழுங்கல் அரிசி, பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. அரசால் வழங்கப்படும் அரிசியை சிலர் மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, லாப நோக்கத்தோடு பதுக்கி வைத்து, அரிசி ஆலைகளில் பட்டை தீட்டி கள்ளச்சந்தையிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள், அவர்களுக்கு உடந்தையாக உள்ளவர்கள் போலீஸ்துறையினரால் கைது செய்யப்பட்டு, அபராதம், சிறை விதிக்கப்படுகிறது.
இனிமேல் மக்கள் சிலரும் வாங்கும் அரிசியை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் லாப நோக்கத்தோடு, இது போன்ற நபர்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் மக்கள் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களின் ரேஷன் கார்டுகள் முடக்கம் செய்யப்படும், என்றார்.

