ADDED : செப் 27, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்திய கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது.
தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டை கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்டு கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
திருநெல்வேலி ஆதிதிராவிடர் பயிற்றுவிப்பு வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் மதுரை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கலைச்செல்வம் , தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் பேசினர்.
வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சண்முக சுந்தரம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி, கல்லுாரி செயலாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.