/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலை மறைத்து கார், வேன்கள்
/
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலை மறைத்து கார், வேன்கள்
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலை மறைத்து கார், வேன்கள்
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயிலை மறைத்து கார், வேன்கள்
ADDED : பிப் 12, 2025 06:17 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் முன்புறம் உள்ள காலியிடத்தில் கார், வேன்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு வந்து செல்ல முடியாமலும், பொங்கல் வைப்பதிலும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இக்கோயிலின் முன் பகுதியில் உள்ள காலி இடத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
தற்போது இந்த இடத்தில் கார், வேன்கள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதால் ரோட்டில் நடந்து செல்பவர்கள் அம்மனை தரிசிக்க முடியாமலும், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வரும் நிலையில் அவர்கள் எளிதில் வந்த செல்ல முடியாமலும், பல சமயங்களில் பொங்கல் வைக்க இடமின்றி ஆக்கிரமித்து கார் வேன்கள் நிறுத்தப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
ஏற்கனவே கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கோயில் முன்பகுதியில் உள்ள காலி இடத்திலும் வாகனங்களை நிறுத்தி அம்மனை தரிசிக்க முடியாமல் இடையூறு ஏற்படுவதை தவிர்க்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கூறுகையில், இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் திருப்பணிகள் முடிவடையும்போது முன்புறம் உள்ள காலி இடத்தில் வேலிகள் அமைக்கப்படும் என்றார்.

