/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஷப்பூச்சிகளின் கூடாரமாகும் கண்டமான கார்கள்
/
விஷப்பூச்சிகளின் கூடாரமாகும் கண்டமான கார்கள்
ADDED : அக் 16, 2024 04:25 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விஷப்பூச்சிகளின் கூடாரமாகும் கண்டமான கார்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் ஆயுள் முடிந்த பழைய அம்பாசிடர் கார்கள், ஜீப்கள் மெயின் கட்டட வளாகத்திலும் சரி, கருவூலத்துறை, சுகாதாரத்துறை அலுவலக வளாகங்களிலும் சரி நிறைய காணப்படுகின்றன.
இவற்றை முறைப்படி கண்டம் செய்யாமல் விட்டுள்ளதால் இன்று அவை விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.
கண்டமான கார்கள் பக்கம் செல்ல அலுவலர்கள், ஊழியர்களே அச்சப்படும் நிலை உள்ளது. தற்போது மழை வேறு துவங்கியுள்ளதால் இந்த நேரத்தில் விஷப்பூச்சிகள் ஆங்காங்கே நடமாட வாய்ப்புள்ளது.
அவை செயல்படாமல் முடங்கி கிடக்கும் இது போன்ற கண்டமான கார்களை பயன்படுத்தும்.
இந்த கார்களை ஏலம் விட கூட இனி வாய்ப்பில்லாத சூழல் தான் உள்ளது. அந்தளவுக்கு அவை தரம் குறைந்து, துருப்பிடித்து விட்டதாக உள்ளது. சில வாகனங்கள் தொட்டாலே உடைந்து விடுமளவுக்கு உள்ளன.
கடந்த ஆண்டு மஞ்சப்பை விழிப்புணர்வுக்காக காதி அலுவலகம் அருகே உள்ள ஜீப் பயன்படுத்தப்பட்டது. இதே போல் மற்ற கண்டமான வாகனங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு பிறகு எந்த வாகனங்களிலும் பொருத்தப்படவில்லை.
இந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். விரைவில் புதிய கலெக்டர் அலுவலகம் வேறு திறக்கப்பட உள்ளது.
மாவட்ட நிர்வாகம் வளாக பராமரிப்பு நடவடிக்கையில் இந்த கண்டமான கார்களை அப்புறப்படுத்த வேண்டும்.